தேங்காய் சரிபாதியாக உடைய....
சமையலுக்கு பயன்படுத்தும் பருப்பு வகைகள் அனைத்தையும் சிறிது நேரம் நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் விரைவில் வெந்துவிடும்.
ஊறுகாய் பாட்டில்களில் பிளாஸ்டிக் மற்றும் மர ஸ்பூன்களை போட்டு வைத்தால் ஊறுகாய் நீண்ட நாட்களில் கெடாமல் இருக்கும்.
முட்டைக்கோசை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து தயிரில் போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொட்டுங்கள் கோஸ் தயிர் பச்சடி சுவையுடன் நன்றாக இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்| போன்ற கலந்த சாதங்கள் செய்யும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்து| போட்டு கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காயை உடைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.
0
Leave a Reply